தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் |

'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பான் இந்தியா நடிகராக மாறியவர் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதன்பின் அவர் நடித்த சில படங்கள் பான் இந்தியா படமாக வெளியானாலும் பெரிய அளவில் வரவேற்பையும், வசூலையும் குவிக்கவில்லை. அந்தக் குறையை சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' தீர்த்து வைத்தது.
பிரபாஸின் அடுத்த படமாக 'சலார் 2' படம் வெளியாகும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படத்தின் எஞ்சிய காட்சிகளின் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்பது தெளிவாகத் தெரியாமல் உள்ளது. அப்படியே ஆரம்பித்தாலும் இந்த வருடமோ, அடுத்த வருடத் துவக்கத்திலோ வெளியாக வாய்ப்பில்லை.
'கல்கி 2898 ஏடி' வெற்றியை பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில் அவரது அடுத்த வெளியீடாக 'ராஜா சாப்' படம்தான் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. மாருதி இயக்கத்தில் தமன் இசையமைப்பில், பிரபாஸ் நடிக்கும் இப்படத்தின் சிறிய முன்னோட்ட வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.
2025 ஏப்ரல் மாதம் 10ம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். “ஹாரர் ரொமான்டிக் காமெடி' படமாக இது இருக்கும் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்கள். படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் அந்த வீடியோவில் இடம் பெறவில்லை.