ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் சேத்தன். ஏராளமான படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான 'விடுதலை' படத்தில் அவர் நடித்த நெகட்டிவான போலீஸ் அதிகாரி கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது. விடுதலை இரண்டாம் பாகத்திலும் அந்த கேரக்டர் தொடர்கிறது. இந்த நிலையில 'ஜமா' என்ற படத்தில் அதுபோன்ற ஒரு முக்கியமாக கேரக்டரில், அதாவது மூத்த தெருக்கூத்து கலைஞர் வேடத்தில் நடித்துள்ளார். படம் வருகிற 2ம் தேதி வெளிவருகிறது.
இதுகுறித்து அவர் கூறியதாவது : கிரைம், த்ரில்லர் அல்லது மேற்கத்திய கருப்பொருளை கதைக்களமாகத் தேர்ந்தெடுப்பது பல புது இயக்குநர்களின் பொதுவான நடைமுறையாகிவிட்டது. நமது கலாச்சாரத்தின் நெறிமுறை அழகியலை கதையாக்கிய இந்த படத்தின் இயக்குனர் பாரியின் துணிச்சலான முடிவு தனித்துவமானது. விடுதலைப் படத்திற்குப் பிறகு, 'ஜமா' படத்தில் வலுவான கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. திரையரங்குகளில் இருக்கும் ஒவ்வொரு பார்வையாளர்களின் இதயத்தையும் தொடும் படம் இது. என்றார்.
இந்த படத்தில் பாரி இளவழகன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார்.