பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

நடிகர் சங்க செயலாளராக இருந்து வரும் விஷால் கடந்த 2017 - 19 காலக்கட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பு வகித்தார். இந்தக் காலக்கட்டத்தில் சங்கத்தில் இருந்த ரூ.12 கோடி நிதியை முறைகேடாக செலவழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை திருப்பி தர சொல்லி தற்போது சங்க நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
ஆனால் அவர் எந்த பதிலும் தரவில்லை. இதனால் சங்கத்தின் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி இனி விஷாலை வைத்து புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து அதன்பின் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று அறிக்கை வெளியிட்டது.
இதற்கு விஷால் தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‛‛இது உங்கள் குழுவில் உள்ள கதிரேசன் ஆகியோரை உள்ளடக்கி எடுக்கப்பட்ட கூட்டு முடிவு. அந்த நிதியானது கல்வி, மருத்துவக் காப்பீடு மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் முதியோர் மற்றும் நலிந்த உறுப்பினர்களின் நலப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?
சினிமாவில் நிறைய பணிகள் உள்ளன. அதில் முறையாக கவனத்தை செலுத்துங்கள். இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது. விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார். முடிந்தால் என்னை என்னைத் தடுத்து நிறுத்துங்கள். திரைப்படங்களைத் தயாரிக்காத மற்றும் ஒருபோதும் தயாரிக்காத தயாரிப்பாளர்களே ஆரோக்கியமான விஷயங்களைப் பற்றி யோசியுங்கள்” என சவால் விடும் வகையில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு தொடர முடிவு
விஷால் சார்பில் அவரது மானேஜர் ஹரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்தபோது தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நிறைவேற்றிய தீர்மானத்தின் பேரில் அவர்கள் ஒப்புதலோடு அந்த நிதி எடுக்கப்பட்டு நலிந்த தயாரிப்பாளர்களின் ஆயுள் காப்பீடு, மருத்துவ உதவி, திருமணம், கல்வி உதவி, தீபாவளி பரிசு போன்றவற்றுக்காக அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது. ஒப்புதல் அளித்தவர்கள் இப்போதும் சங்கத்தில் பொறுப்பில் உள்ளனர். இந்த நிலையில் எங்களுக்கு எந்த முன் அறிவிப்பும் கொடுக்காமல் விஷால் மீதான காழ்ப்புணர்ச்சியோடு தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவு கண்டிக்கத்தக்கது. இதன் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வழக்கு தொடரப்படும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.




