எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா | புதையல் கதையில் நாக சைதன்யா |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா, கிரித்தி ஷெட்டி, யோகி பாபு மற்றும் பலர் நடிக்க கடந்த வருடக் கடைசியில் அறிவிக்கப்பட்ட படம் 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்'. இப்படத்தை சுருக்கமாக 'எல்ஐசி' என குறிப்பிட்டனர் படக்குழுவினர். இந்த வருடம் ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
'எல்ஐசி' என்ற தலைப்பு தான் பதிவு செய்து வைத்த தலைப்பு என இயக்குனரும், இசையமைப்பாளருமான எஸ்எஸ் குமரன் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார். அதன்பின் எல்ஐசி நிறுவனமும் இத்தலைப்பை பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டது.
இருந்தாலும் படக்குழுவினர் படத்தின் தலைப்பு குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் படத்திற்கு 'ப்ளூ ஸ்டோரி' என்று தலைப்பு வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாட்களில் இதன் அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.