லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் |
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இவர் தற்போது அதர்வாவை வைத்து இயக்கி வரும் படம் டிஎன்ஏ. இந்த படத்தில் கதாநாயகியாக சித்தா புகழ் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார். ஒரு பக்கம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டே இன்னொரு பக்கம் படத்தின் டப்பிங் பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இது குறித்த புகைப்படம் ஒன்றையும் படக்குழுவினர் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.
ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடிகர் ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் நிறைவடைந்ததை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு தந்த அதர்வாவுக்கு நன்றி. என்னிடம் கதை கேட்காமலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படம் அவரது திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என உறுதியாக நான் கூறுவேன். படத்தில் நடித்துள்ள நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.