மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. வித்யாசாகர் என்பவரை மணம் முடித்த மீனாவுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய் நடித்த தெறி படத்தில் அவரது மகளாக நடித்து அசத்தினார். மீனா தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இரு ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் வித்யாசாகர் மரணம் அடைந்தார். பின்னர் அதிலிருந்து மீண்டு படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் மீனா இரண்டாவது திருமணம் செய்ய போவதாக அடிக்கடி வதந்தி பரவுகிறது. இதற்கு ஏற்கனவே அவர் பலமுறை விளக்கம் அளித்தார். ஒருமுறை ‛தன்னைப் போல் குழந்தைகளுடன் இருக்கும் நிறைய பெண்களைப் பற்றி யோசித்து பேசுங்கள்' என பதிவிட்டு இருந்தார்.
தற்போது மீண்டும் அவரது திருமணம் பற்றியும், இன்னும் பிற வதந்திகளும் பரவி வருகின்றன. அதற்கு பதிலடியாக "வெறுப்பாளர்களால் வதந்தி உருவாக்கப்படுகிறது. முட்டாள்களால் பரப்பப்பட்டு, முட்டாள்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார் மீனா.