ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் உடன் இணைந்து பல படங்களில் காமெடி ரோலில் நடித்தவர் வாசுகி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100 படங்கள் வரை நடித்துள்ளார். அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக.,வில் அவர் ஓரங்கட்டப்பட்டார். சினிமா பட வாய்ப்பும் இல்லாமல், அதிமுக.,விலும் அங்கீகாரம் இல்லாமல் தனது சொந்த ஊரான காரைக்குடிக்கே சென்றுவிட்டார். இந்நிலையில் தான் வறுமையில் வாடுவதாகவும் சாப்பிட்டிற்கே கஷ்டப்படுவதாகவும் கண்கலங்க பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில் ‛‛ஜெயலலிதா புகைப்படம் பதித்த பெரிய டாலர் செயின், வைர மூக்குத்தி, காலில் அரை கிலோவுக்கு கொலுசு இதெல்லாம் போட்டிருந்தேன். ஜெயலலிதா இறந்த பிறகு கஷ்டம். அதனால் எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். எனக்கு கர்ப்ப பையில் 3 கட்டி இருந்தது. அதையும் எடுத்துவிட்டார்கள்.
இங்குள்ள நடிகர் சங்கம் செய்யாத உதவியை தெலுங்கு நடிகர் சங்கம் செய்தது. மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு அங்குள்ள நடிகர் சங்கத்தில் அவரே பணம் கட்டி என்னை உறுப்பினராக்கினார். சிரஞ்சீவி, நாகேந்திரபாபு ஆகியோர் பணம் தந்தார்கள். தெலுங்கு மக்களும் பணம் தந்தார்கள். அதை வைத்து கண் ஆபரேஷன் செய்தேன். ரேஷன் கடையில் தரும் அரிசியை வைத்து சாப்பிட்டு வருகிறேன்.
எனக்கு தங்குவதற்கு ஒரு இடமும், வேலையும் கொடுத்தால் போதும் நான் பிழைத்துக் கொள்வேன். தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு ஆந்திராவில் உதவுகிறார்கள். ஆனால் இங்குள்ள நடிகர் சங்கம் எந்த உதவியும் செய்யவில்லை. இப்போது நான் ரோடு ரோடாக திரிகிறேன். நாசர், கார்த்தி, விஷால் ஆகியோருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள், மடிப்பிச்சை கேக்கிறேன்'' என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.