'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
பொங்கல், கோடை விடுமுறை ஆகியவற்றிற்குப் பிறகு ஆகஸ்ட் மாதம்தான் பட வெளியீடுகளுக்கான சீசனை ஆரம்பித்து வைக்கும் மாதம். ஆகஸ்ட் 15ல் வரும் சுதந்திர தினம், அதன் பின் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி என தொடர்ந்து பண்டிகைகள், சில விடுமுறை நாட்கள் என சினிமா வட்டாரமே பரபரப்பாக இருக்கும்.
'இந்தியன் 2' படம் வந்த பிறகு அடுத்தடுத்து பல முக்கிய படங்களின் அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில படங்களின் வெளியீட்டுத் தேதிகள் வரவேண்டியிருக்கிறது. அறிவித்தபடி அந்தந்தப் படங்கள் வருமா என்பதும் போகப் போகத்தான் தெரியும். அறிவித்துவிட்டு பின் தள்ளி வைப்பதும் சமீப காலங்களில் சில பெரிய படங்களுக்கும் நிகழ்கிறது.
இன்றைய நிலவரப்படி அடுத்தடுத்து வெளிவர உள்ள சில முக்கிய படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த வெளியீட்டுத் தேதிகள் இதோ…
ஜூலை 26 - ராயன்
ஆகஸ்ட் 15 - ரகு தாத்தா
செப்டம்பர் 5 - தி கோட்
செப்டம்பர் 27 - மெய்யழகன்
அக்டோபர் 10 - கங்குவா
அக்டோபர் 31 - அமரன்
'தங்கலான், வணங்கான்' ஆகிய படங்கள் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. 'அந்தகன்' படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 'வேட்டையன்' படத்தை தீபாவளிக்கு வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறது. 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. அதை முடித்து பின் இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்து தீபாவளிக்கு வருவது என்பது சந்தேகம்தான்.
தியேட்டர்கள் கிடைப்பது, ஓடிடி உரிமை விற்பனை, மற்ற மாநிலங்களில் உள்ள போட்டிகள் என பல விஷயங்களை கருத்தில் கொண்டுதான் பட வெளியீட்டை முடிவு செய்ய வேண்டி உள்ளது. ரசிகர்கள் ரிலீஸ் அப்டேட் என என்னதான் தொந்தரவு செய்தாலும் ஒரு படத்தை வெளியிடும் வலி அதன் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும். 300 கோடி செலவு செய்து ஜாம்பவான்கள் கூட்டணியில் வெளியாகும் படங்களே தடுமாறும் போது எவ்வளவு விஷயங்களை யோசித்து வெளியிட வேண்டும் என்பதை அந்தந்த ஹீரோக்களின் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.