நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

12வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா (சைமா) வரும் செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் துபாயில் நடைபெற இருக்கிறது. இதில் 2023ம் ஆண்டில் வெளிவந்த படங்களில் இருந்து சிறந்த படங்களும், கலைஞர்களும் தேர்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுகளை பெற போட்டி பிரிவில் இருக்கும் படங்கள், கலைஞர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' 11 விருதுகளுக்கும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த 'மாமன்னன்' 9 விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பரிந்துரை பட்டியலின் முக்கிய பிரிவுகள் வருமாறு:
சிறந்த படம் : ஜெயிலர், மாமன்னன், லியோ, பொன்னியின் செல்வன் 2, விடுதலை.
சிறந்த நடிகர் : ரஜினிகாந்த் (ஜெயிலர்), விஜய் (லியோ), விக்ரம் (பொன்னியின்செல்வன் 2), சிவகார்த்திகேயன் (மாவீரன்), உதயநிதி ஸ்டாலின் (மாமன்னன்), சித்தார்த் (சித்தா).
சிறந்த நடிகை : திரிஷா (லியோ), நயன்தாரா (அன்னபூரணி), ஐஸ்வர்யாராய் (பொன்னியின்செல்வன் 2), கீர்த்திசுரேஷ் (மாமன்னன்), மீதா ரகுநாத் (குட்நைட்), ஐஸ்வர்யா ராஜேஷ் (பர்ஹானா).
சிறந்த இயக்குனர் : நெல்சன் (ஜெயிலர்), லோகேஷ் கனகராஜ் (லியோ), மணிரத்னம் (பொன்னியின்செல்வன் 2), வெற்றிமாறன் (விடுதலை), அருண் குமார் (சித்தா), மாரி செல்வராஜ் (மாமன்னன்).
சிறந்த குணச்சித்திர நடிகர் : வடிவேலு (மாமன்னன்), எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்), எஸ்ஜே.சூர்யா (ஜிகர்தண்டாடபுள்எக்ஸ்), சரத்குமார் (வாரிசு), வசந்த் ரவி (ஜெயிலர்).
சிறந்த குணச்சித்திர நடிகை : முல்லை அரசி (ஆர்யூ ஓகே பேபி). நதியா (லெட்ஸ் கெட்மேரிட்), அபர்ணதி (இறுகப்பற்று), சரிதா (மாவீரன்), ரெய்ச்சல் ரெபக்கா (குட் நைட்).
சிறந்த இசையமைப்பாளர் : இளையராஜா (விடுதலை), ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின்செல்வன் 2), அனிருத் (ஜெயிலர், லியோ), சந்தோஷ் நாராயணன் (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சித்தா), நிவாஸ் கே.பிரசன்னா (டக்கர்).
சிறந்த நகைச்சுவை நடிகர் : வடிவேலு (சந்திரமுகி 2), விடிவி கணேஷ் (டாடா), சுனில் (ஜெயிலர்), யோகி பாபு (மாவீரன், ஜெயிலர்), ரெடின் கிங்ஸ்லி (கான்ஜுரிங் கண்ணப்பன்).




