தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் | கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம் | காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ரத்தா கபூர். வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள். ஏக் வில்லன், ஏபிசிடி, பாகி, ராக் ஆன் 2, ஸ்ட்ரீட் டான்சர், பகேடியா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரபாஸ் ஜோடியாக 'சாஹோ' படத்தில் நடித்திருந்தார்.
புனேயில் உள்ள ஒரு ஷோரூம் திறப்பு விழாவுக்கு ஸ்ரத்தா கபூர் சென்றார். இதற்கு அவர் கணிசமான தொகை சம்பளமாக பெற்றிருந்தார். திறப்பு விழாவுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பத்திரிகையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு அவர் சென்றார். அங்கு பாதுகாப்புக்கு 2 போலீசார் மட்டுமே நின்றிருந்தனர். இதனால் திடீரென அந்த பகுதியை சேர்ந்த மக்கள் உள்ளே புகுந்தனர்.
கூட்டத்துடன் புகுந்த ரசிகர்கள் பலர் ஸ்ரத்தாவை கட்டிபிடித்து செல்பி எடுக்க முண்டியடித்தனர். சிலர் அவரை கண்ட இடத்தில் தொட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்ரத்தா தனது உதவியாளர்களையும், போலீசையும் உதவிக்கு அழைத்தார். அவர்களோடு பவுன்சர்களும் வந்து சேர எல்லோருமாக சேர்ந்து ஸ்ரத்தாவை திறப்பு விழா பகுதிக்கு அழைத்துச் சென்றனர். விழா முடிந்தும் கூடுதல் போலீசார், கூடுதல் பவுன்சர்கள் வந்து அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் விழா ஏற்பாட்டாளர்கள் இதற்காக வருத்தம் தெரிவித்தனர். இந்த வீடியோவை தற்போது ஸ்ரத்தா தனது இன்ஸ்ட்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.