'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
முன்னணி பாலிவுட் நடிகையான ஸ்ரத்தா கபூர் அவ்வப்போது ஒரு பாடலுக்கு நடனமாடுவார். அப்படி அவர் ஆடும் நடனங்கள் வைரலாகும், ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு ஒரு படத்திற்கான சம்பளம் வாங்குவார். நட்புக்காக சில படங்களிலும் ஆடியுள்ளார்.
இந்த நிலையில் பாலிவுட்டில் தயாராகி வரும் ஹாலிவுட் பாணியிலான ஓநாய் மனிதனை பற்றிய படமான பெடியா படத்தில் ஆடியுள்ளார். வருண் தவான் நடிப்பில் அமர் கவுஷிக் இயக்கத்தில், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தயாரிப்பில் உருவாகும் படம் இது.
இதில் தும்கேசரிஞ் என்று தொடங்கும் பாடலில் ஆடியுள்ளார். கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்துள்ள இந்த பாடலில் வருண் தவான் - கீர்த்தி சனோன் ஆகியோருடன் ஸ்ரத்தா கபூர் ஆடியுள்ளார். சச்சின்-ஜிகார் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு அமிதாப் பட்டாச்சார்யா வரிகள் எழுதியுள்ளார்.
இயக்குநர் அமர் கவுஷிக்கின் முந்தைய படமான 'ஸ்திரீ' யில் ஷ்ரத்தா கபூர் ஏற்கெனவே ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது.