பிப்., 28ல் வெளியாகிறது சுழல் 2 வெப்தொடர் | விஜய் தேவரகொண்டா பட டீசருக்கு குரல் கொடுக்கும் சூர்யா | 20வது திருமணநாளை மனைவியுடன் கொண்டாடிய மகேஷ் பாபு | நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது | தயாரிப்பாளர் மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு | நீதிமன்றத்தில் பிரபல நடிகை ரகசிய வாக்குமூலம் ; வெளிநாட்டுக்கு தப்பிய இயக்குனருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | புஷ்பா-2வுக்காக வழிவிட்டு ஒதுங்கிய பாலிவுட் படக்குழுவுக்கு அல்லு அர்ஜுன் நன்றி |
மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'விடாமுயற்சி'. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் ஆரம்பமானதிலிருந்து எந்தவிதமான போஸ்டர்களையும் வெளியிடாமல் இருந்தது படக்குழு.
அப்படத்திற்கு அடுத்து அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் இரண்டு லுக்குகள் வெளியான பின்பு கூட எதையும் விடாமல் இருந்தார்கள். ரசிகர்கள் பலர் கேட்டதற்குப் பிறகு ஒரு வழியாக ஜுன் 30ம் தேதி திடீரென 'விடாமுயற்சி' படத்தின் முதல் லுக்கை வெளியிட்டார்கள். ஒரு நெடுஞ்சாலையில் கையில் ஒரு பேக்குடன் அஜித் நடந்து வருவது போன்ற முதல் லுக் வெளியானது. அதற்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தது. அதை வைத்து பல மீம்ஸ்களும் வெளிவந்தன. இப்படியா முதல் போஸ்டரை வெளியிடுவது என்று அஜித் ரசிகர்களே நொந்து போனார்கள்.
இந்நிலையில் நேற்று திடீரென இரண்டாவது லுக்கை வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்கள். அது மட்டுமல்ல இரண்டு விதமான லுக்கையும் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்கள். ஒரு போஸ்டரில் அஜித் ஜீப் ஓட்டுவது போலவும், மற்றொரு போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் நிற்பது போலவும் வெளியிட்டார்கள். முதல் லுக்கின் விமர்சனங்களை சமாளிக்கும் விதமாக இந்த இரண்டு இரண்டாவது போஸ்டர்களும் படம் ஆக்ஷன் படம்தான் என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தன.