பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். அப்பாவை போல் சினிமாவில் ஆர்வம் உள்ள இவர் ‛சகாப்தம்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது அன்பு இயக்கத்தில் ‛படை தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். யானையை பின்புலமாக வைத்து இந்தப்படம் தயாராகிறது.
விஜயகாந்த் இறந்த சமயத்தில் சண்முக பாண்டியன் உடன் ஒரு படத்தில் நடிக்க தயார் என அறிவித்திருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதன்படி படை தலைவன் படத்தில் இவர் சிறப்பு வேடத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஒருமாத காலமாக ராகவாவிற்காக படை தலைவன் படக்குழுவினர் காத்திருந்துள்ளனர். ஆனால் லாரன்ஸ் தனது படம் உள்ளிட்ட பல பணிகளில் பிஸியாக இருப்பதால் இதில் நடிக்கவில்லை என தெரிகிறது.
இப்போது லாரன்ஸிற்கு பதில் படை தலைவன் படக்குழுவினர் மறைந்த நடிகர் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இதில் நடிக்க வைக்க முடிவெடுத்தனர். அதன்படி விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தில் கொண்டு வருவதற்கான பணிகள் இன்று(ஜூன் 22) முதல் துவங்கி உள்ளன.
இறந்த பின்னரும் தனது மகனுக்காக கைகொடுத்துள்ளார் விஜயகாந்த். அடுத்தமாதம் இறுதியில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.