இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

பிக்பாஸ் சீசன் 13 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை தேவோலீனா பட்டாசார்ஜி. தற்போது இவர் ‛குகி' என்ற படத்தில் பத்திரிக்கையாளர் வேடத்தில் நடிக்கிறார். பிரணாப் ஜே.டெக்கா இயக்குகிறார். ரித்திஷா, ரீனா ராணி, ஆஷா, பந்திப் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 28ல் படம் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
தேவோலீனா பட்டாசார்ஜி கூறுகையில், ‛‛இப்படத்தில் நான் பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். இதில் மைனர் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யடுகிறார். இந்த வழக்கில் எனது கதாபாத்திரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள படத்தை பாருங்கள்'' என்றார்.
தயாரிப்பாளர் ஜன்மோனி தேவி கூறுகையில், ‛‛ஒருவரின் பலாத்காரம் ஊடகங்களுக்கு ஒரு பரபரப்பான செய்தி. ஆனால் பாதிக்கப்பட்டவரின் உடலிலும் மனதிலும் என்ன நடக்கிறது என்பதை யாரும் உணரவில்லை. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் தனது உயிரை காப்பாற்றிய போதிலும், ஒவ்வொரு கணமும் இறந்து கொண்டே இருக்கிறார். முதலில் இந்த கதையை அசாமி மொழியில் உருவாக்க நினைத்தேன். ஆனால் இயக்குனர் பிரணாப் உடனான கலந்துரையாடலுக்கு பின் ஹிந்தியில் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். இந்தப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது'' என்றார்.