ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' | 'பெருசு' முதியவர்களை பெருமைப்படுத்தும் | தாய்மாமன் உறவை பேசும் மாமன் படம் : கோடையில் ரிலீஸ் | பிளாஷ்பேக் : 'டிக் டிக் டிக்' படத்தால் சர்ச்சையில் சிக்கிய பாரதிராஜா |
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக் குழு படத்திலிருந்து கவனிக்கப்படும் காமெடியனாக வலம் வந்த நடிகர் சூரி, ‛விடுதலை' படத்தில் ஹீரோவாக உருவெடுத்தார். அப்படம் அவருக்கு நல்லதொரு பெயரை வாங்கிக் கொடுத்தது. அதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள கருடன் படம் கடந்த 31ஆம் தேதி திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. இப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு இந்திய அளவில் ஒரு காமெடி நடிகர் ஹீரோவாக நடித்து 50 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சூரியின் ஹீரோ மார்க்கெட்டில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.