'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக ரீ-ரிலீஸ் என்பது அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இப்படி ஒரு ரீ-ரிலீஸை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அதாவது, படத்தின் பெயரை மாற்றி ஒரு ரிலீஸ்.
மாணிக்க வித்யா இயக்கத்தில் உமாபதி, சம்ஸ்கிருதி, பாலசரவணன், தம்பி ராமையா மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வெளியான படம் 'தண்ணி வண்டி'.
அந்தப் படத்தின் பெயரை 'பித்தல மாத்தி' எனப் பெயர் மாற்றி புதிய படம் போல இன்று ரிலீஸ் செய்கிறார்கள். சினிமா ரசிகர்கள் இது ஏதோ ஒரு புதுப்படம் என நினைத்து பார்க்க வருவார்கள் என நினைத்து இப்படி செய்திருக்கிறது படக்குழு.
இது என்ன சரியான 'மாத்தி' வேலையா இருக்கே என கோலிவுட்டிலேயே ஆச்சரியப்படுகிறார்கள்.