நல்ல படத்தை மிஸ் செய்ததற்கு வருத்தப்படுகிறேன் - ரகுல் ப்ரீத் சிங் | ஓணம் வாழ்த்து எதிரொலி - கடும் விமர்சனத்தில் சிக்கிய விஜய்! | ராகவா லாரன்ஸின் 25வது படத்தை இயக்கும் தெலுங்கு பட இயக்குனர்! | அமரன் படத்தின் டப்பிங் பணிகளைத் முடித்த சிவகார்த்திகேயன்! | பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் வரிசைக்கட்டும் படங்கள்! | சிம்புவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் தி கோட் படத்தில் நடந்த மாற்றம்! | லெஜண்ட் சரவணன் படத்தில் இணைந்த பிரபலங்கள்! | காதலரை கரம்பிடித்த மேகா ஆகாஷ்: சென்னையில் எளிய முறையில் நடந்த திருமணம் | மக்களின் ஆதரவு உற்சாகப்படுத்துது...!: சந்தோஷத்தில் சஞ்சனா | போதை மறுவாழ்வு மையத்தில் ஸ்ரீகுமார் அட்வைஸ்! |
ஒரு படத்தில் ஓரளவிற்குப் பெயர் கிடைத்துவிட்டால் போதும், மேடை கிடைத்துவிட்டால் எதையாவது பேச ஆரம்பித்துவிடுகிறார்கள் சில சினிமா ஆட்கள். அப்படியான ஒருவராக தற்போது எம்எஸ் பாஸ்கர் ஆகிவிட்டார். நேற்று நடைபெற்ற 'லாந்தர்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார்.
அப்போது பேசுகையில், “பப்ளிக்குக்கு நான் என்ன சொல்றன்னா, படம் உங்களுக்குப் பிடிக்குதா, நாலு பேர் கிட்ட சொல்லுங்க. புடிக்கலன்னா உங்களோட வச்சிக்குங்க. படத்துக்கு போறவங்க கிட்ட, ஏய் ச்சீ போகாத, இந்தப் படம் நல்லால்ல என சொல்லாதீங்க. ஒரு படம் எடுப்பதற்கு எவ்வளவு பேர் உழைக்கிறார்கள், எவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்கள் என்பதைத் தெரிஞ்சுக்குங்க. எவ்வளவோ பேர் வந்து படப்பிடிப்பில் விபத்துக்கள் ஏற்பட்டு இறந்து போயிருக்காங்க. அந்த மாதிரிலாம் கஷ்டப்பட்டு எடுக்கற படத்தை தியேட்டர்லயே உட்கார்ந்துட்டு மொக்கை, இந்தப் படத்துக்கு வராதன்னு சொல்லாதீங்க. இந்த 120 ரூபாய்ல, 200 ரூபாய் நாங்க மாட மாளிகை, கோபுரம் கட்டப் போறதில்ல,” என்று பேசினார்.
அவரது இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தைப் பெற்று வருகிறது. தொடர்ந்து சினிமாக்காரர்கள் கஷ்டப்பட்டு எடுக்கிறோம், கஷ்டப்பட்டு எடுக்கிறோம் என பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இங்கு யார்தான் கஷ்டப்படுவதில்லை.
படம் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் அந்த 120 ரூபாயை உழைத்துத்தான் சம்பாதிக்கிறார்கள். ஒரு டீக்கடை போனால் கூட டீ நன்றாக இல்லை என்றால் அங்கே சாப்பிட வேண்டாம் என்பார்கள். பத்து ரூபாய் டீக்கே அப்படி என்றால் 120 ரூபாய், 200 ரூபாய் செலவு செய்து ஒரு மொக்கை படத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் அஷ்வின், “40 கதை கேட்டேன், கேட்கும் போதே தூங்கிவிட்டேன்,” என்று திமிராகப் பேசியிருந்தார். அதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தது. அதன்பின் அவர் நடித்த ஓரிரு படங்கள் கூட ஓடவேயில்லை.
பொது மேடையில் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என அஷ்வின், எம்எஸ் பாஸ்கர் போன்றவர்களுக்கு யாராவது 'கிளாஸ்' எடுக்க வேண்டும் போலிருக்கிறது.