நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் மஞ்சும்மேல் பாய்ஸ். இந்த படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல நகைச்சுவை நடிகர் சவ்பின் ஷாஹிர் இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் மாறி தனது சகோதரர் பாபு ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோருடன் இணைந்து தயாரித்திருந்தார். சுமார் 20 கோடி பட்ஜெட்டில் வெளியான இந்த படம் 220 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த சிராஜ் வளையதாரா என்கிற பைனான்சியர் இந்த படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக தான் 7 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகவும், படம் வெளியான பிறகு வரும் மொத்த லாபத்தில் 40 சதவீத பங்கு தனக்கு தருவதாகவும் கூறிய மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் தனக்கு பணம் தராமல் மோசடி செய்வதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போலீசார் மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இன்னொரு பக்கம் இதன் மூலம் பண மோசடி நடந்திருக்கலாம் என அமலாக்கத் துறையும் இவர்கள் மீது தனது விசாரணையை ஆரம்பித்தது. இது குறித்து விளக்கம் பெறுவதற்காக நேரில் ஆஜராகுமாறு மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியது.
அதை அவர்கள் பொருட்படுத்தாத நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தாங்கள் பணம் வாங்கிய நபருக்கு உரிய முறையில் பங்குத் தொகையை பிரித்தளிக்காமல் பேராசையின் காரணமாக தேவையில்லாத சிக்கலில் மஞ்சும்மேல் வாய்ஸ் தயாரிப்பாளர்கள் மாட்டிக்கொண்டதாகவே திரையுலகத்தினரும் ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.