'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சினிமாவுக்கு முன் இமான் அண்ணாச்சி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நெல்லை-தூத்துக்குடி தமிழில் பேசி அசத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் இமான் அண்ணாச்சி. இன்று வெள்ளித்திரையில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருகிறார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது சினிமா பயணம் குறித்து பேசியுள்ளார்.
அதில், 'நான் சின்ன வயசுலேயே சினிமாவுல காமெடியனா நடிக்க ஆசைப்பட்டேன். ஊர்ல எல்லோரும் நான் நல்லா சிரிக்க வைக்கிறதா சொல்லி சினிமாவுல நடிச்சா என்னன்னு கேட்டாங்க. உடனே மஞ்சப்பையை தூக்கிட்டு சென்னைக்கு வந்துட்டேன். முதல்ல ஒரு மளிகை கடைல வேலைக்கு சேர்ந்தேன். அங்க நான் சினிமாவுல நடிக்க தான் வந்திருக்கேன்னு தெரிஞ்சப்போ வேலைய விட்டு அனுப்பிட்டாங்க. அப்புறம் ஒரு கேமரா கடைல சேர்ந்தேன். அதுக்கப்புறம் காசுக்காக ரோட்டுல காய்கறி வியாபாரம் செஞ்சேன். அப்பதான் என்ன நம்பி பொண்ணையும் கொடுத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. பொண்டாட்டி நகைய பணம் தேவைக்காக ஒன்னு ஒன்னா வித்துட்டேன். ஆனா இப்ப சினிமாவுல வாய்ப்பு கிடைச்சு சம்பாதிச்ச அப்புறம் நூறு பவுனா அவங்களுக்கு திருப்பி கொடுத்துட்டேன்' என்று தனது சினிமா பயணம் குறித்து இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.