அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மார்க் ஆண்டனி படத்தை அடுத்து அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் படம் குட் பேட் அக்லி. அஜித் குமார் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதத்தில் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. அங்கு ஒரு சண்டைக் காட்சி மற்றும் பாடல் காட்சியை படமாக்கி இருக்கிறார். இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஆதிக் ரவிச்சந்திரன், ‛‛உங்களது அர்ப்பணிப்பு ஈடுபாடு ஆகியவற்றை பார்த்து வியந்து விட்டேன். எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். லவ் யூ சார்'' என்று ஒரு பதிவு போட்டு உள்ளார்.