நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

1980ல் மூடுபனி என்ற படத்தில் அறிமுகமானவர் மோகன். அதன் பிறகு ஒரு 10 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் நாயகனாக திகழ்ந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்து வந்தன. கடந்த 15 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தவர், தற்போது ஹரா என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஏழாம் தேதி திரைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் மோகன், தான் அளித்த ஒரு பேட்டியில், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛சில்க் ஸ்மிதா நடித்த பெரும்பாலான படங்களில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் நிஜத்தில் அவர் ரொம்ப நல்லவர். அதோடு நல்ல நடிகை. நான் அவரது நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவரிடத்தில் நெருங்கி பழகி இருக்கிறேன். அப்போது அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்ததால் அவரிடத்தில் கால்ஷீட் கேட்டு தயாரிப்பாளர்கள் காத்துக் கிடந்தார்கள். ஆனபோதிலும் சில்க் ஸ்மிதா யாரிடத்திலும் அலட்டிக் கொள்ள மாட்டார். ரொம்ப சாதாரணமாக எளிமையாக இருக்கக் கூடியவர்'' என்று தெரிவித்துள்ளார் மோகன்.