'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
'விடுதலை' படத்திற்குப் பிறகு கதையின் நாயகனாக சூரி நடித்த 'கருடன்' படம் நேற்று வெளியானது. துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், சசிக்குமார், உன்னி முகுந்தன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நேற்று வெளியான இப்படத்திற்கு விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக அமைந்துள்ளன. அதனால், நேற்று மாலை காட்சி, இரவுக் காட்சிகளுக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதாகத் தகவல்.
ஏ சென்டர்களை விட பி அன்ட் சி சென்டர்களில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய முதல் நாள் வசூலாக சுமார் 3 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களின் வரவேற்பு இன்னும் அதிகமாகும் என்றும் தெரிகிறது.
அதனால், 'விடுதலை' படத்தை அடுத்து இந்தப் படத்திலும் நாயகனாக சூரி வெற்றி பெறுவார் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.