அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகர்களில் ஒருவர் கவின். அவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து 'டாடா' படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது. இந்த வருடம் வெளிவந்த 'ஸ்டார்' படம் சுமாராக ஓடியது. கவின் தற்போது நடன இயக்குனர் சதீஷ் இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் 'பிளடி பெக்கர்' படத்திலும், இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இது தவிர மேலும் சில படங்களில் நடிக்க அவரிடம் பேசி வருகிறார்கள். ஆனால், கவின் தற்போது தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டாராம். சுமார் 8 கோடி வரை அவர் சம்பளம் கேட்கிறார் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
அவர் கதாநாயகனாக நடித்து இதுவரையில் ஒரே ஒரு படம் மட்டும்தான் லாபத்தைக் கொடுத்துள்ளது. அதற்குள் இப்படி சம்பளத்தை உயர்த்தினால் எப்படி என விமர்சனங்கள் எழுந்துள்ளதாம். நெல்சன், வெற்றி மாறன் தயாரிக்கும் படங்களில் நடிப்பதால்தான் இப்படி ஏற்றிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தி பின் காணாமல் போன நடிகர்களைப் பற்றியும் கவின் யோசித்துப் பார்க்க வேண்டும் என சில அனுபவஸ்தர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.