பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் |
மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், தமிழ் நடிகரான கவுதம் கார்த்திக் உடன் 'தேவராட்டம்' படத்தில் இணைந்து நடித்தார். அந்த படத்தின் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் குறித்து அப்போது பல வதந்திகள் வந்தன. அதற்கு விளக்கம் அளித்து தற்போது மஞ்சிமா மோகன் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய திருமணம் தொடர்பான பல தவறான தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. திருமணத்துக்கு முன் நான் கர்ப்பமாக இருந்ததாகவும், திருமணத்தில் என் மாமனாருக்கு விருப்பமில்லை என்றும் பல பொய்யான தகவல்கள் பரவின. இந்த வதந்திகள் எங்களுடைய குடும்பத்தை காயப்படுத்தியது மட்டும் உண்மை. பெரும்பாலானோர் எங்கள் திருமணம் குறித்து மகிழ்ச்சியடைந்தனர். சிலர் கேலி செய்தனர்.
என்னை உடல்கேலி செய்து காயப்படுத்தும் கருத்துகள் வெளிவந்தபோது நான் வருந்தவில்லை. அது அவர்களின் பார்வைகோளாறு என்றே கருதி வந்தேன். ஆனால் திருமணத்துக்குப் பின் இது குறித்து கவலைப்பட்டிருக்கிறேன். நான் கவுதமுக்கு ஏற்ற ஜோடியில்லை என்ற கருத்துகளை கேட்கும்போது மனது வலிக்கும். அப்போது நான் தோல்வியடைந்தவளாக உணர்வேன்.
தம்பதியினர் தங்கள் சமூகவலைதளங்களில் திருமண புகைப்படங்களை பதிவிடுவதைப் பார்த்து எனக்கும் பதிவிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் பயத்தால் அதை செய்வதில்லை. எல்லாவற்றையும் தாங்கி கொள்ளும் சக்தியை கவுதமின் காதலும் அன்பும் எனக்கு தந்திருக்கிறது.
இவ்வாறு மஞ்சிமா கூறியுள்ளார்.