பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தெலுங்கில் 2021ம் ஆண்டில் வெளியான 'உப்பென' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரித்தி ஷெட்டி. அந்தப் படம் அவருக்கு பெரிய வெற்றியையும், நல்ல அறிமுகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதன்பின் அவர் நடிப்பில் சில படங்கள் வரவேற்பைப் பெற்றாலும் தெலுங்கில் இன்னும் முன்னணி நடிகையாக வர முடியாமல் இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் தயாரான 'த வாரியர்' படம் மூலம் இங்கு அறிமுகமானார். அடுத்து அதே போலத் தயாரான 'கஸ்டடி' படத்திலும் நடித்தார். இரண்டுமே தோல்விப் படங்களாக அமைந்தன.
பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த 'வணங்கான்' படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படத்திலிருந்து சூர்யா விலகியதால், அனைத்துமே மாறியது.
இந்நிலையில் தற்போது தமிழில் மூன்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கிரித்தி. கார்த்தி ஜோடியாக 'வா வாத்தியார்', ஜெயம் ரவி ஜோடியாக 'ஜீனி', பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக 'எல்ஐசி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் மூலம் தமிழில் முன்னணி நடிகை வரிசையில் இடம் பிடிக்கலாம் கிரித்தி.