டைம் ஸ்கொயரில் வெளியிடப்பட்ட எம்புரான் பட டிரைலர் | மோகன்லால் மகனை இயக்கும் பிரம்மயுகம் இயக்குனர் | ரூ.125 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன் | விஜய் சேதுபதியை இயக்கப் போகும் பூரி ஜெகன்னாத்? | ரஜினி சந்திப்பு பற்றி பிருத்விராஜ் நெகிழ்ச்சி | 700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'அரபிக் குத்து' | அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ? | நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா |
குஷி படத்திற்கு பிறகு சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வரும் சமந்தா, அதையடுத்து ஒரு புதிய படத்தில் கதையின் நாயகியாகவும் நடிக்கப் போகிறார். கடந்த சில ஆண்டுகளாக மயோசிடிஸ் நோய்யால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் ஈடுபட்டு வந்த சமந்தா, தற்போது அதிலிருந்து விடுபட்டு உற்சாகத்துடன் காணப்படுகிறார். மேலும், இன்ஸ்டாகிராமில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சமந்தா, தற்போது தான் சண்டை பயிற்சி செய்யும் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அவர் காலை தூக்கி அடிக்கும் ஸ்டைலை பார்த்து இது விஜயகாந்த் பாணியில் வேற லெவலில் உள்ளதே என்று ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.