உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது | கும்கி 2 பட ஹீரோ மதி யார் தெரியுமா? : லிங்குசாமி சொன்ன குட்டி லவ் ஸ்டோரி | காதலருடன் கட்டியணைத்து போஸ் கொடுத்த சமந்தா | 50 கோடி கிளப்பில் இணைந்த ‛டயஸ் இரே' : ஹாட்ரிக் அடித்த பிரணவ் மோகன்லால் | கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக தள்ளிப்போன விருஷபா |

விஜய் டிவியின் ஹிட் தொடரான பாக்கியலெட்சுமி் சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வீஜே விஷால். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிக அன்பையும் பெற்று வந்த வீஜே விஷால் திடீரென அந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகர் நவீன், எழில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஷால் எதற்காக விலகினார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பாக்கியலெட்சுமி தொடரில் சமீப காலங்களில் எழில் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதே விஷால் விலகியதற்கான காரணம் என சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கிடையில் விஷால் புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக கமிட்டாகியுள்ளதுடன், குக் வித் கோமாளி சீசன் 4லும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.