செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கும் முன்னே செப் வெங்கடேஷ் பட் அதிலிருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் என பலரும் விலக முற்றிலும் புதிய குழுவுடன் சீசன் 5 ஆரம்பமானது. இந்நிலையில் கோமாளியாக வந்த நாஞ்சில் விஜயன், குக் வித் கோமாளி சீசன் 5லிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் நான் இனி கலந்து கொள்ளமாட்டேன்' என கூறியுள்ளார்.
இதுபோல் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் பாக்ஸ் ஆபிஸ் நிறுவனத்துடன் மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதிராக டாப்பு குக்கு டூப்பு குக்கு தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சலசலப்பால் குக் வித் கோமாளி சீசன் 5 முந்தைய சீசன்களை போல வெற்றி பெறுமா? என ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.