ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் | ஒரே ஆண்டில் 80 கோடி வரி செலுத்தி விஜய் சாதனை | கனடா நாடாளுமன்றத்தில் கருணாசுக்கு கவுரவம் | கன்னட நடிகை ஷோபிதா மரணம் | தமிழ் ஹீரோக்களுக்கு சறுக்கலைத் தந்த சரித்திரப் படங்கள் | ‛காந்த கண்ணழகி' பெயர் சில்க் ஸ்மிதாவிற்கு தான் பொருந்தும்... - கனவாய் கலைந்து போன கவர்ச்சி தாரகை | பிளாஷ்பேக்: வேஷமிட்டு வாய்ப்பைப் பெற்ற ஜெமினிகணேசன் | டிசம்பர் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் ; உற்சாகத்தில் ராஷ்மிகா |
திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைந்தாலும் தெலுங்கு சினிமாவில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். 2007ம் ஆண்டு வெளிவந்த 'லக்ஷ்மி கல்யாணம்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானவருக்கு 2009ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'மகதீரா ' படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து டார்லிங், பிருந்தாவனம், மிஸ்டர் பெர்பக்ட், நாயக், பிசினஸ்மேன் போன்ற படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தார்.
திருமணத்திற்கு பிறகு காஜல் தமிழில் நடித்த ஹேய் சினாமிகா, கோஸ்டி, கருங்காப்பியம் படங்கள் அவருக்கு எந்த பலனையும் தரவில்லை. தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். ஆனால் தெலுங்கில் கடைசியாக நடித்த 'பகவன்த் கேசரி' படம் அவருக்கு ரீ என்டரி கொடுத்தது. தற்போது அவர் தெலுங்கில் நடித்துள்ள படம் 'சத்யபாமா'.
இந்த படத்தில் காஜல் சோலோ ஹீரோயினாக என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சுமன் சிக்கலா இப்படத்தை இயக்கியுள்ளார். காஜல் அகர்வாலுடன் பிரகாஷ்ராஜ் மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். படம் வரும் மே 17ம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.