லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தனுஷ் தனது 50வது படமான 'ராயன்' என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெய்ராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாக இந்த படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர்களைக் உற்சாகப்படுத்த ராயன் படத்திலிருந்து முதல் பாடல் வருகின்ற மே இரண்டாம் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளார்; பிரபுதேவா நடனம் இயக்கியுள்ளார். இந்த பாடலில் 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் தனுஷூடன் இணைந்து நடனமாடி உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.