படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் 2026ம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார். காதல் நாயகனாக அறிமுகமானாலும் கடந்த பல படங்களாகவே ஆக்ஷன் நாயகன் என்ற அந்தஸ்துடன்தான் இருக்கிறார் விஜய். அவரைப் போலவே காதல் நாயகனாக அறிமுகமாகி, ஆக்ஷன் ஹீரோவாக மாறியவர் விஷால்.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளது போல விஷாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போகதாகவும் கூறியிருக்கிறார். இதனிடையே, நேற்று நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க ஓட்டுச்சாவடிக்கு சைக்கிள் ஓட்டிக் கொண்டு சென்றார்.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது விஜய் சைக்கிளில் சென்று ஓட்டளித்தார். அது பரபரப்பாகப் பேசப்பட்டது. அது போலவே நேற்று விஜய்யைக் காப்பியடித்து விஷால் சைக்கிளில் சென்றார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர்.
விஜய் சைக்கிளில் சென்ற போது அவரது பின்னால் பலரும் சென்றனர். ஓட்டுச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், நேற்று விஷால் சென்ற போது அவரை வீடியோ எடுத்தவர் மட்டுமேதான் உடன் சென்றிருக்கிறார்.