'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகர் திரவியம். தொடர்ந்து ஈரமான ரோஜவே சீசன்-2விலும் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். அதன்பின் தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு சீரியலில் அறிமுகாகி நடித்து வரும் திரவியம், தற்போது மீண்டும் தமிழுக்கே வந்துள்ளார். விஜய் டிவியில் புதிதாக தயாராகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற தொடரில் திரவியம் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸும், வில்லியாக ஆர்த்தி சுபாஷும் நடிக்கின்றனர். இந்த தொடரானது வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.