இருவரைக் காப்பாற்றி மீட்டெத்த 'மதராஸி' | செப்டம்பர் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது | பிளாஷ்பேக் : இளையராஜாவுக்காக ஒரு வருடம் காத்திருந்த நதியா, பாசில் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா | 'பிக்பாஸ்' விஜய் சேதுபதிக்கு 75 கோடி சம்பளம் | அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு | பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் |
தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா தொடர் மிக விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனையடுத்து மல்லி என்கிற புதிய தொடரின் புரோமோ அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இந்த தொடரில் ஹீரோயினாக நிகிதா நடிக்கிறார். இவர் ஏற்கனவே அருந்ததி தொடரிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான சூரியவம்சம் தொடரிலும் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் இந்த தொடரில் ரோஜா தொடரில் வில்லியாக நடித்த வீஜே அக்ஷயா மற்றும் பேரன்பு தொடரில் நடித்த விஜய் வெங்கடேசன் ஆகியோர் முக்கிய ரோலில் கமிட்டாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இதன்காரணமாக ரசிகர்களிடத்திலும் இந்த தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.