டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் |

சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் படம் 'கங்குவா'. இரண்டு பாகங்களாக வெளிவரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சிவா இயக்குகிறார். சூர்யாவுடன் பாபி தியோல், திஷா பதானி, நட்ராஜ், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார், தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
இந்த படம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை மற்றும் தற்போது நடக்கும் கதை என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகிறது. இந்த நிலையில் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் உள்ளார் சூர்யா. இதன் மூலம் இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய ஒரு தளபதி, மற்றும் இன்றைய காலகட்டத்தை சேர்ந்த கார்ப்பரேட் தாதா என இரண்டு வேடங்களில் சூர்யா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.




