'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் பஹத் பாசில். ஒரு பக்கம் வில்லத்தனம், இன்னொரு பக்கம் காமெடி என கலந்து கட்டி நடித்து வரும் பஹத் பாசில் சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தில் அவரது ரங்கா கதாபாத்திரத்திற்காக பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான 'ஆடுஜீவிதம்' படத்தில் பிரித்விராஜின் நடிப்பு குறித்து பஹத் பாசிலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “12 வருடங்களாக கதையுடன் அவர் பயணித்து வந்துள்ளார். ஆறு வருடங்களாக அந்த கதாபாத்திரத்தை மனதில் தாங்கி பயணித்துள்ளார். ஆனால் ஒரு கதாபாத்திரத்திற்காக இத்தனை வருடங்கள் எடுத்துக் கொள்கின்ற நபர் நான் இல்லை. அதிகபட்சம் ஒரு கதையுடன் ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரை மட்டுமே என்னால் பயணிக்க முடியும்” என்று கூறியுள்ளார் பஹத் பாசில்.




