பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அண்மையில் கார்த்திக் என்பவருடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. புதுமண தம்பதிகளை விஜயகாந்த் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்ற ரோபோ சங்கர் அதுகுறித்து உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியபோது, 'கேப்டனை பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு ரசிகனாக புதுமண தம்பதிகளை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் இங்கே வந்திருக்கிறோம்.
திருமணத்திற்கு பிறகு என் பெண்ணையும் மாப்பிள்ளையும் அழைத்துக்கொண்டு குலசாமியை பார்த்ததும் நேராக கேப்டனை தான் பார்க்க வந்துள்ளோம். தமிழ் சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, விஜயகாந்தை போல் இன்னொருவர் வர முடியாது. கேப்டன் எங்களுக்கு குலசாமி. அதனால் அவரை பார்க்க இங்க வந்திருக்கிறோம். எங்களுக்கு இந்த வாய்ப்பளித்த அண்ணியாருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.