அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
'கார்த்திகேயா 2' படம் மூலம் பிரபலமான நிகில் தற்போது நடிக்கும் படம் 'சுயம்பு'. பீரியட் பிலிம்மான இதில் பழம்பெரும் வீரராக நடிக்கும் நிகில் படத்தில் தன் கதாபாத்திரத்திற்காக ஆயுதம், தற்காப்பு கலை, குதிரை சவாரி போன்றவற்றில் தீவிர பயிற்சி எடுத்துள்ளார். பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் நிகிலின் 20வது படமாகும். பிக்சல் ஸ்டுடியோவின் சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கின்றனர். பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.
இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். அவருடன் தற்போது நபா நடேஷ் இணைந்துள்ளார். கன்னடத்தில் அறிமுகமான நபா தெலுங்கில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். ஸ்மார்ட் சங்கர், டிஸ்கோ ராஜா, அல்லுடு அதர்ஸ், மேஸ்ட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அவர் இளவரசியாக நடிக்கிறார்.