படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அவரது தாய் மாமா கார்த்திக்குடன் சென்ற வாரம் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவின் தம்பி தான் இந்த கார்த்திக் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கையில் அவரை பற்றிய சில தகவல்களை அவரே கூறியுள்ளார்.
கார்த்திக் சிறுவயதாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அதன்பின் தாயாருடன் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்த அவர் தொடர்வோம் என்ற தொண்டு நிறுவனத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'எங்கள் நிறுவனத்தில் ரோபோ சங்கர் மாமாவும், ப்ரியங்கா அக்காவும் உறுப்பினர்கள். அப்படிதான் எனக்கு அவர்கள் அறிமுகம் கிடைத்தது. நான் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது போல் பிரியங்கா அக்கா என்னை தம்பியாக தத்தெடுத்துக் கொண்டார். என்னுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பிரியங்கா அக்காவின் பங்களிப்பும் நிறைய உள்ளது' என்று பெருமையாக உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.