Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

171வது படத்தில் தங்க கடத்தல் மன்னனாக நடிக்கும் ரஜினி!

31 மார், 2024 - 03:02 IST
எழுத்தின் அளவு:
Rajini-will-act-as-the-king-of-gold-smuggling-in-the-171st-film!


தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் டீசர் ஏப்ரல் 22ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் டைம் டிராவல் சம்பந்தப்பட்ட கதையில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், உங்களோட யூகங்களை தாண்டி வேறு மாதிரியான கதையில் இந்த படம் உருவாகிறது. ரஜினியை புதிய பரிமாணத்தில் காண்பிக்க போறேன் என்று கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் தற்போது 171வது படத்தில் ரஜினிகாந்த் தங்க கடத்தல் மன்னனாக ஒரு நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ரஜினி நெகட்டிவ் வேடத்தில் நடித்த படங்கள்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று லோகேஷ் கூறியிருந்த நிலையில், தற்போது இப்படி ஒரு தகவல் வெளியாகியிருப்பது அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. அதோடு இந்த படத்திலும் விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் போன்ற கேரக்டர் இடம் பெறுவதாகவும், ஒரு முன்னணி ஹீரோ அந்த வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜாபர் சாதிக் விவகாரம்! இயக்குனர் அமீருக்கு சம்மன்!ஜாபர் சாதிக் விவகாரம்! இயக்குனர் ... போட்டிங் வித் மை பாய்ஸ் - நயன்தாரா வெளியிட்ட வீடியோ! போட்டிங் வித் மை பாய்ஸ் - நயன்தாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)