குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் அப்டேட் | ஸ்ருதி நாராயணனின் இன்ஸ்டா பதிவு | சிக்கந்தர் - மோசமில்லாத முதல் நாள் வசூல் | மாஸ்க், தொப்பி அணிந்தபடி டேட்டிங் செல்லும் விஜய்தேவர கொண்டா - ராஷ்மிகா | ரிலீஸிற்கு முன்பே பார்த்திருந்தால் மோகன்லால் அனுமதித்திருக்க மாட்டார் : மேஜர் ரவி கருத்து | தல வருகிறார், அவரை பாருங்கள் : அருண் விஜய் வெளியிட்ட பதிவு | ஏற்றி விட்ட ஏணியை மறந்து போன நடிகர்கள் : பாவமில்லையா பாரதிராஜா...! | மேலிடத்து உத்தரவு... கால்ஷீட் தராத தனுஷ் : தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | கண்ணப்பா ரிலீஸ் தள்ளிப்போனது : காரணம் இது தான் | விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் |
கடந்த வருடம் அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி என்கிற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான நவீன் பாலிஷெட்டி. இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடம் இன்னும் பிரபலமானார். இவர் தற்போது அடுத்ததாக 'அனகனகா ஒக ரோஜா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் பகுதியில் பைக் ஓட்டி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராமல் விபத்தில் சிக்கியுள்ளார் நவீன் பாலிஷெட்டி.
இதனால் இவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே இந்த விபத்து நடந்தாலும் ஆரம்பத்தில் வெறும் காயம் என்று மட்டுமே நினைத்த நிலையில் தற்போது அது எலும்பு முறிவு என தெரிய வந்ததால் அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.