கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
நடிகர் விஜயின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தற்போது இந்த படத்தின் கதை களம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இத்திரைப்படம் கிரிக்கெட் கதை பின்னணியில் உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர். அதனாலேயே படத்தின் ஹீரோ முடிவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.