இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், கமல் நடிக்கும் தக் லைப் என்கிற படத்தை இயக்கி வருகிறார். நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 35 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணையும் படம் இது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கால்சீட் பிரச்சினை காரணமாக சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் இந்த படத்தில் இருந்து வெளியேறியதாக சொல்லப்பட்டது.
இதேபோன்றுதான் தற்போது ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டதாக இன்னொரு தகவலும் கசிந்துள்ளது. இவர்கள் இருவருமே ஏற்கனவே மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்து புகழ் பெற்றவர்கள் தான். இந்த நிலையில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சிம்பு இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இப்போது ஜெயம் ரவி கதாபாத்திரத்தின் நடிப்பதற்காக நடிகர் நிவின்பாலியும் இந்த படத்தில் இணைய உள்ளார் என்கிற புதிய தகவலும் வெளியாகி உள்ளது.
சிம்புவும் ஏற்கனவே மணிரத்னம் படத்தில் நடித்தவர் என்பதாலும் தற்போது கமல் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் அவர் நடித்து வருவதாலும் தக் லைப் படத்திற்கு ஏற்றவாறு அவரது தேதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என கமல், மணிரத்தினம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.