Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா வாழ்க்கை படம் துவக்கம் : தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்

20 மார், 2024 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Dhanush-in-Ilayaraja-Life-Story-:-Directed-by-Arun-Matheswaran

இளையராஜாவின் வாழ்க்கை கதையில் உருவாகும் படத்தில் அவரது வேடத்தில் தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை சென்னையில் நடந்தது.

‛அன்னக்கிளி' படத்தில் அறிமுகமாகி இசை உலகின் ராஜா என பெயர் எடுத்தவர் ‛இசைஞானி' இளையராஜா. 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர் இன்றும் பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். இவரது வாழ்க்கை படமாக உருவாவதாகவும் அதில் தனுஷ் நடிப்பதாகவும் நீண்டகாலமாகவே பேச்சுகள் வந்தன. தற்போது அது நிஜமாகி உள்ளது. நேற்று தனுஷ், ‛‛கிடாரின் பின்னணியில் காவிய பயணம் துவங்குகிறது'' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.



இந்நிலையில் படத்தின் பூஜை மற்றும் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரமாண்டமாய் நடந்தது. இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை ஏற்கனவே தனுஷை வைத்து ‛கேப்டன் மில்லர்' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இளையராஜாவே இசையமைக்கிறார். படத்திற்கு இளையராஜா என்றே பெயர் வைத்துள்ளனர்.



படத்தின் துவக்க விழாவில் தனுஷ், அருண் மாதேஸ்வரன் தவிர்த்து இளையராஜா, கமல்ஹாசன், கங்கை அமரன், சந்தானபாரதி, ஆர்வி உதயகுமார், வெற்றிமாறன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் பங்கேற்றனர். ஆகஸ்ட் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராஜமவுலிக்கு பரிசு கொடுத்து வாழ்த்திய 83 வயது ஜப்பான் ரசிகைராஜமவுலிக்கு பரிசு கொடுத்து ... எனது இரண்டு ஆசையில் ஒன்று நடந்துள்ளது : தனுஷ் மகிழ்ச்சி எனது இரண்டு ஆசையில் ஒன்று ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in