அண்ணன் அண்ணன் தான் : விஜய் குறித்து சிவகார்த்திகேயன் | ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி |
கமல்ஹாசன் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2006ல் வெளியான படம் ‛வேட்டையாடு விளையாடு'. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கமலினி முகர்ஜி, ஜோதிகா ஆகியோர் நடித்திருந்தனர். கமலின் பிளாஷ்பேக் காட்சிகளில் வரும் கமலினி முகர்ஜிக்கு அதுதான் முதல் தமிழ்படம். அதற்கு முன்பு ஹிந்தியில் நடித்திருந்தார்.
அப்படத்தில் கமல் - கமலினி முகர்ஜி ஜோடியின் கெமிஸ்ட்ரி பெரிதும் பேசப்பட்ட நிலையில், அடுத்து நீண்ட நாட்களாக தமிழில் படம் நடிக்காமல் இருந்தார். கடைசியாக தமிழில் ‛இறைவி' படத்தில் நடித்திருந்தார். அதன்பின் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‛புலிமுருகன்' படத்தில் நடித்தார். அதற்கடுத்து படங்களில் நடிக்காமல் ஒதுங்கிஇருந்த கமலினி முகர்ஜியின் தற்போதைய புகைப்படம் வைரலாகியுள்ளது.
அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள கமலினி முகர்ஜியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இவர் என ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.