சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், கமல்ஹாசன், ஜோதிகா மற்றும் பலர் நடிப்பில் 2006ல் வெளியான படம் 'வேட்டையாடு விளையாடு'. மாறுபட்ட கிரைம் திரில்லராக வெளிவந்த படம் அப்போது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தைத் தொழில்நுட்ப ரீதியாக 7.1 மற்றும் 4 கே டிஜிட்டல் என தரம் உயர்த்தி கடந்த மாதம் ஜுன் 23ம் தேதி வெளியிட்டார்கள். பழைய படமாக இருந்தாலும் டிஜிட்டல் தரத்தில் படத்தைப் பார்க்க ரசிகர்கள் விரும்பினார்கள். அதனால், படம் தற்போது 25வது நாளைத் தொட்டுள்ளது. இந்தக் காலத்தில் மறு வெளியீட்டில் ஒரு படம் 25 நாளைக் கடப்பது ஆச்சரியம்தான். புதிய படங்களே ஒரு வாரம் தாக்குப் பிடித்து ஒட முடியாத காலத்தில் ஒரு பழைய படம் 25 நாளைக் கடந்திருப்பதை திரையுலகினரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
அதனால், பழைய நல்ல படங்களை டிஜிட்டல் தரத்தில் உயர்த்தி மறு வெளியீடு செய்ய பலரும் தங்களது வேலைகளை ஆரம்பித்துள்ளார்கள்.