‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் | 'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? |

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்ததை தொடர்ந்து இப்போது இதன் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளதாக படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.