பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
அயலான் படத்திற்கு பின் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‛அமரன்' படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கமல் தயாரிக்கும் இந்த படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். அனிரூத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கி உள்ளது. முருகதாஸ் அடுத்து சல்மான்கான் படத்தை இயக்க போகிறார். அதனால் இந்த படத்தை விரைவாக முடிக்க திட்டமிட்டு அதற்கு ஏற்றபடி படப்பிடிப்பையும் தீவிரமாக நடத்தி வருகிறார். எப்படியும் இப்படத்தை இந்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.