மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! |

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து கடந்த வருடத்தில் வெளிவந்த திரைப்படம் 'போர் தொழில்'. இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார். க்ரைம் த்ரில்லர் கதை களத்தில் வெளிவந்த இப்படம் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்து வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இதன் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மீண்டும் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க இப்போது ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இது போர் தொழில் 2ம் பாகம் ஆக இருக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




