ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் பார்க்க விரும்பும் இடம் குணா குகை. சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வெளியான குணா படத்தில் பிரதான இடம் பிடித்த இந்த குகை அந்த படத்தின் பெயரிலேயே சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. இந்த நிலையில் இந்த குணா குகையை ரசிகர்களிடம் மீண்டும் நினைவுபடுத்தும் விதமாக மலையாளத்தில் சமீபத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியாகி உள்ளது.
கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் 10 நண்பர்கள் கொண்ட குழுவில் இருந்து ஒரு இளைஞர் இந்த குணா குகைக்குள் தவறுதலாக விழுந்து விட, மற்ற நண்பர்கள் அவரை காப்பாற்ற எடுக்கும் முயற்சிதான் இந்த படம். உண்மையில் இதே போன்று நடந்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சிதம்பரம்.
இந்த குகைக்குள் விழுந்த பலரது உடல் பாகங்கள் கூட கிடைக்காமல் போன நிலையில் சில வருடங்களுக்கு முன் கேரளாவில் இருந்து இப்படி உள்ளே தவறி விழுந்த ஒருவர் மட்டும் அவரது நண்பர்களாலேயே உயிருடன் மீட்கப்பட்டார். இந்த அதிசய நிகழ்வை வைத்து தான் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தில் நடித்த இந்த நண்பர்கள் குழு அப்படியே தத்ரூபமாக நடித்து நிஜத்தில் இப்படித்தானே நடந்திருக்கும் என்பதை திகிலில் உறைய வைக்கும் விதமாக காட்டி இருந்தார்கள்.
அதேசமயம் நிஜத்திலே இது போன்ற சம்பவத்தை எதிர்கொண்ட நண்பர்கள் குழுவையும் படப்பிடிப்பின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை தேவைப்படுகின்ற இடங்களில் எல்லாம் பயன்படுத்திக் கொண்டுள்ளார் இயக்குனர் சிதம்பரம். குறிப்பாக இந்த படத்தின் துவக்கத்திலேயே இரண்டு தரப்பினருக்கு இடையே காட்டப்படும் கயிறு இழுக்கும் போட்டியில் ஒரு குரூப் இந்த படத்தில் நடித்த நடிகர்கள்.. இன்னொரு குரூப் யார் என்றால் அவர்கள் தான் நிஜமாகவே இந்த கொடைக்கானல் சம்பவத்தை எதிர்கொண்டவர்கள் என்று ஒரு புதிய தகவலை சமீபத்தில் கூறியுள்ளார் இயக்குனர் சிதம்பரம்.




