'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வெளியான படம் ஜவான். இந்த படம் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்தது. மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி தொடங்கியிருக்கும் நிலையில் ஷாரூக்கான் ஒரு புதுமையான காஸ்டியும் அணிந்து நடனம் ஆடி இருந்தார். அது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானதை அடுத்து ஷாரூக்கானின் ரசிகர் ஒருவர், இந்த ஸ்டைலில் உங்களை இயக்குனர் அட்லி பார்த்தால், உங்களை வைத்து ஜவானை விட ஒரு மிகப்பெரிய படம் இயக்கி இருப்பார் என்று கூறினார். அதற்கு ஷாரூக்கானோ, இந்த ஸ்டைலை எனக்கு கற்றுக் கொடுத்தது அட்லிதான் என்று அந்த ரசிகருக்கு ஒரு பதில் கொடுத்து இருக்கிறார். ஆனால் இந்த பதிலை பார்த்த இயக்குனர் அட்லியோ, உங்களைப் பார்த்து தான் நான் தினம் பல விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று தனது ரியாக்ஷனை வெளிப்படுத்தி இருக்கிறார்.